×

தேர்தல் செலவுக்காக பா.ஜ வேட்பாளர்களுக்கு மேலிடம் தலா ரூ.15 கோடி: முதல் கட்டமாக ரூ.8 கோடி விநியோகம்; கிராம கோயில்களுக்கு ரூ.10 லட்சம் தரும் வேட்பாளர்கள்

தேர்தல் செலவுக்காக பாஜ வேட்பாளர்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக ரூ.8 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி சிக்கிய விஷயத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதைத் தவிர வேலூரில் ஏ.சி.சண்முகம், தென்காசியில் ஜான் பாண்டியன், சிவகங்கையில் தேவநாதன் யாதவ் ஆகியோரும் பாஜவின் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் பல தொகுதிகளில் பாஜ செல்வாக்கு சரிந்துள்ளதால் பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் பாஜ நேரடியாக போட்டியிடும் 19 தொகுதிகளுக்கு தலா ரூ.15 கோடி வழங்க முடிவு செய்து அந்தப் பணம் சென்னையில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக 8 கோடி ரூபாய், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில ருக்கு நேரடியாகவும் பலருக்கு ஹவாலா மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 கோடி ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் வழங்கப்பட்ட 8 கோடியில்தான் ரூ.4 கோடி தற்போது போலீஸ் வசம் சிக்கியுள்ளது. மீதம் உள்ள 4 கோடி குறித்து நிர்வாகிகள் வாய் திறக்க மறுத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடி சிக்கியுள்ளதால், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நயினாருக்கு வழங்கப்பட்ட பணத்தை பாஜநிர்வாகிகள் சிலரே உளவுத்துறைக்கு போட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவைக்கும் நேற்று முன்தினம் ரயிலில் பணம் கொண்டு செல்லப்பட்டதாம். ஆனால் அதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரத்தில் கோவையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படாமல், கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கிராமத்துக்கு ரூ.10 லட்சம் தருவதாக பாஜசார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராம தலைவர்களுக்கு தனியாக பணமும் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு பணம் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில் கட்சி வழங்கும் ரூ.15 கோடி தவிர நிர்வாகிகள் பல தொழிலதிபர்களிடமும் வசூலித்துள்ளனர். இந்தப் பணமும் தற்போது செலவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், கட்சி ரூ.7 கோடியை ஓரிரு நாளில் வடசென்னையில் உள்ள மார்வாடிகள் மூலம் ஹவாலா முறையில் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் பணம் சென்னையில் வழங்கப்பட்டு, சொந்த ஊர்களில் ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவினர் பணத்தை வாரியிறைத்து செலவு செய்யத் தொடங்கியுள்ளதால், பறக்கும் படையினர் தங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post தேர்தல் செலவுக்காக பா.ஜ வேட்பாளர்களுக்கு மேலிடம் தலா ரூ.15 கோடி: முதல் கட்டமாக ரூ.8 கோடி விநியோகம்; கிராம கோயில்களுக்கு ரூ.10 லட்சம் தரும் வேட்பாளர்கள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Supreme Court ,Nayanar Nagendran ,Chennai ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கு!: உச்சநீதிமன்றம்...